தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பாம்பனில் கடல் உள்வாங்கியது: நாட்டுப் படகு மீனவர்கள் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:36 pm

கவிதைமணி

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.

பாம்பன் பகுதியிலுள்ள சின்னப்பாலம் கடலோரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறிய நாட்டுப்படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தபிறகு படகுகளை கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருப்பார்கள்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சின்னப்பாலம் தென் கடல் திடீரென கரையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவுக்கு உள்வாங்கியது. இதனால் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகள் தரைதட்டி சாய்ந்த நிலையில் நின்றன.

இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் முடியாமல் தவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.