தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருவெள்ளறை பெருமாள் கோயில் தேர்த் திருவிழா மார்ச் 25-ல் தொடக்கம்

சிறிரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா 25-ம் தேதி தொடங்குகிறது.

Updated On :9 மார்ச் 2016, 2:59 am

சிறிரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா 25-ம் தேதி தொடங்குகிறது.

பழைமைவாய்ந்த இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா மார்ச் 25-ம் தேதி  துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து மார்ச் 28ல் கருட சேவை புறப்பாடு, 30-ல் யானை வாகனம், 31-ல் பூந்தேர் உற்சவம் நடைபெறுகிறது.  ஏப்ரல் 1-ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 2-ம் தேதி காலை 8.30 மணிக்கும் நடைபெறுகிறது. ஏப்ரல் 4-ம் தேதி ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும்.

தேர்த் திருவிழா உற்சவத்தில் திருவெள்ளறை, பூனாம்பாளையம், காளவாய்ப்பட்டி, தில்லாம்பட்டி, காட்டுக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பர் என்பதால், திருவிழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.