எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய முதல்நிலைத் தகுதிப்போட்டி: ஜனவரி 5 ஆம் தேதிமதுரையில் நடக்கிறது

ஜப்பானில் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை அடையாளம் காணும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:59 pm

ஜெயப்பாண்டி

ஜப்பானில் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை அடையாளம் காணும் முதல்கட்ட தகுதிப் போட்டி மதுரையில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

 இதுகுறித்து தேசிய இளைஞர் கூட்டுறவு அமைப்பின் மாநிலப் பொறுப்பாளர் பேராசிரியர் ஏ.கதலிநரசிங்கப்பெருமாள் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரேசிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 பேர் பங்கேற்றும், தங்கப்பதக்கம் வெல்லவில்லை. மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாமிடம் வகித்தும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லாதது வருத்தமளிக்கிறது. 

 ஒலிம்பிக்கில் இந்தியா எதிர்காலத்தில் சிறப்பான இடம் வகிக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அதன்மூலம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 வீரர்களை அடையாளம் காண மூன்று கட்டப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தேசிய அளவில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 705 மாவட்டங்களில் முதல் கட்டமாக 70 இடங்களில் முதல்நிலைத் தேர்வு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 

 தமிழகத்தில் 5 இடங்களில் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர்களை அடையாளம் காணும் முதல்கட்ட போட்டிகள் ஜனவரி 5 ஆம் தேதி மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

தில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

போட்டியானது 100 மீ, 200 மீ, 400 மீ என நடத்தப்படவுள்ளது. இதில் மாணவ, மாணவியர் அல்லது பொதுவானவர்கள் பங்கேற்கலாம். கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் பிறந்தவர்கள் ம்டடுமே பங்கேற்கமுடியும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் புகைப்படம், வயதுச்சான்றை போட்டி நாளன்று நேரில் கொண்டுவரவேண்டும்.

 போட்டிகள் 11 வயது முதல் 14 வயது வரை மற்றும் 15 வயது முதல் 17 வயது வரை என இரு பிரிவாக நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் பந்தய தூரத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் அடைவோர் மட்டுமே தேர்ச்சி பெறுவர். அவர்கள் தென்னிந்திய அளவிலான இரண்டாம் கட்டப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுவர். அதற்கான செலவும் இளைஞர் அமைப்பே ஏற்கும்.

 தென்னிந்திய அளவிலான போட்டிகளில் தேர்ச்சி பெறுவோர் தேசிய அளவிலான பயிற்சிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மூன்றரை ஆண்டுகள் அவர்களுக்கான கல்வி, இருப்பிடம், உணவு, பயிற்சி என அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.

 போட்டிகள் விவரம்: தமிழகத்தில் முதல்கட்டத் தேர்வுப் போட்டிகள் மதுரையைத் தொடர்ந்து ஜனவரி 7 ஆம் தேதி புதுச்சேரி, 8 ஆம் தேதி கோவை, 9 ஆம் தேதி திருச்சி மற்றும் 10 ஆம் தேதி சென்னை நேரு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறும் என்றார்.

 பேட்டியின்போது தேசிய இளைஞர் கூட்டுறவு அமைப்பின் பொறுப்பாளர்கள் பேராசிரியர் தமிழ்நாயகன் (தேனி), வள்ளுவன் (திண்டுக்கல்), கிரிநாதன் (சிவகங்கை), பழனிகுமார் (ராமநாதபுரம்), மூர்த்தி (நெல்லை) ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.