"கைபேசிகள் நமது கண்களுக்கு தெரியாத ரேடியோ அலைகளால் அதாவது கதிர் வீச்சுகளால் தான் வேலை செய்கின்றன என்பதால் அவற்றை கையில் வைத்துக் கொள்வதே உடல் நலனுக்குக் கேடாகும்'' என்கிறார் தஞ்சாவூர் சிவாஜி நகரை சேர்ந்த செல்போன்கள் பழுதுநீக்கும் பயிற்சி ஆசிரியர் ஜி.தியாகராஜன்.
பி.டெக் பொறியியல் பட்டதாரியான இவர், தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு செல்போன்கள் பழுதுநீக்கும் பயிற்சியை கற்றுக் கொடுத்துள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சிறப்பு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
"இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் பயிற்சி மையத்தில் செல்போன்கள் பழுது நீக்கும் பயிற்சியை முதல் முதலாக நடத்தினேன். தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களிலும்,கேரளா,பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இப்போது செல்போன்கள் பழுது நீக்கும் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் உள்ள 14 பயிற்சி மையங்கள் மூலமாக சுமார் 50 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். 35 ஆயிரம் பேர் சுயமாக தொழில் தொடங்கி சம்பாதித்து வருகின்றனர்.
படுக்கைஅறை, சமையல் அறை ஆகியனவற்றில் செல்போன்கள் பயன்படுத்தவே கூடாது. செல்போனில் நீண்ட நேரம் பேசக்கூடாது. நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருந்தால் மூளையில் கட்டி,மூளைக் காய்ச்சல்,இதய பாதிப்பு,மலட்டுத்தன்மை ஆகியன ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. செல்போன்கள் தண்ணீருக்குள் விழுந்து விட்டாலோ,மழையில் நனைந்து விட்டாலோ general service செய்த பிறகே பயன்படுத்திட வேண்டும். இல்லையேல் செல்போன் முழுவதுமாக கெட்டுப் போகலாம்.
செல்போன் மூலம் பிறரை அழைக்கும் போதோ அல்லது நமக்கு அழைப்பு வரும் போதோ உடனடியாகப் பேசத் துவங்காமல் 5 நொடிகள் கழித்துப் பேசுவதே நல்லது. உடனடியாகப் பேசத் தொடங்கினால் அந்த நேரத்தில் கதிர்வீச்சின் அளவு கூடுதலாக இருக்கும். அது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். செல்போன் பேட்டரியில் 100க்கும் மேற்பட்ட நச்சுத்தன்மையுள்ள தனிமங்கள் இருப்பதால் சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவது ஆபத்தானது. இடி,மின்னல் ஏற்படும் நேரங்களில் செல்போனை அருகில் வைத்துக் கொள்ளவோ,பேசவோ கூடாது.
தரமான செல்போன்களையே வாங்கிப் பயன்படுத்திட வேண்டும்.விலை குறைந்த மற்றும் சீன தயாரிப்புகளை உபயோகிப்பதை தவிர்த்து விடுவது நல்லது. செல்போன்களை ஆண்கள் இடுப்பு பெல்ட்டுகளில் மாட்டி வைப்பதையும், இதயம் இருக்கும் பகுதியில் உள்ள சட்டைப்பையில் வைப்பதையும் தவிர்த்து விடுவது நல்லது.
10.செல்போனில் (ஸ்டார், ஸ்லாஷ், 07, ஸ்லாஷ்) என்று எழுதி அழுத்தினால் நம் கையிலிருக்கும் கைபேசியின் கதிர்வீச்சின் தன்மை திரையில் தெரியும். அவ்வாறு தெரியும் போது 1.6 w/kg என்பது தான் கதிர்வீச்சின் சரியான அளவாகும். இந்த அளவை விட கூடக்கூடாது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


