லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நடா புயல்: புதுச்சேரியில் மழை பாதிப்பு இல்லாததால் மக்கள் நிம்மதி

நடா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் மழை பாதிப்பு எதுவும் இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Updated On :2 டிசம்பர் 2016, 10:09 am

புதுச்சேரி, 

நடா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் மழை பாதிப்பு எதுவும் இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

வங்கக் கடலில் உருவான நடா புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருந்தது. இதையடுத்து புதுச்சேரியில் மாவட்ட நிர்வாகம் தலைமையில் அனைத்து துறைகளும் பேரிடர் ஏற்பட்டால் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

புயல் பாதிப்பு ஏற்பட்டால் கரையோர மக்கள் தங்க ஏதுவாக 179 பாதுகாப்பு இல்லங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நடா புயல் வலுவிழந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் போதிய மழை பெய்யவில்லை. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் இறக்கப்பட்டு விட்டது. 

கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கண்ககான மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

நிவாரணம் தர கோரிக்கை

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் வாழ்க்கை முடங்கி விட்டது. இதனால் தங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.