திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மதுரை காவல் ஆய்வாளர் மீது பெண் புகார்: துறைரீதியான விசாரணை

மதுரை காவல் ஆய்வாளர் மீது பெண் அளித்த புகார் மீது உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:37 am

ஜெயப்பாண்டி

மதுரை காவல் ஆய்வாளர் மீது பெண் அளித்த புகார் மீது உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த 22 வயது பெண் புகார் அளிக்க வியாழக்கிழமை வந்தார். அவரிடம் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் தன்னிடம் மதுரை நகர் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் ஆய்வாளர் ஒருவர் நெருங்கிப் பழகியதாகவும், இதனால் தான் கர்ப்பிணியான நிலையில் தன்னை அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக கூறினார்.

இந்நிலையில் அப்பெண் திடீரென மயக்கமுற்றார். அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில் ராமநாதபுரம் காட்டுப்பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அப்பெண் சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரைக் காணவில்லை என போலீஸாரும் தேடிவந்துள்ளனர்.  இத்தகைய சூழலில்தான் மதுரையில் தற்போது புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டில் அப்பெண் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது புகாருக்குள்ளான காவல் ஆய்வாளர் மீது ஏற்கெனவே சோலையழகுபுரம் பகுதி பெண் புகார் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறுகையில், புகாருக்குள்ளானவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) சமந்த்ரோஹன் ராஜேந்திராவிடம் கேட்டபோது, ஏற்கெனவே அவர் மீது புகார் எழுந்தது. தற்போதும் புகார் கூறப்படுகிறது. மாநகர் காவல் ஆணையர் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீதான புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.