/

விருதுநகர் மாவட்டத்தில் கணினி விவர பணியாளர் பணிக்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில் கணினி விவரப்பணியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:35 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில் கணினி விவரப்பணியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இது குறி்த்து ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இம்மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் 10 கணினி விவர பணியாளர் காலிப்பணியிடம் உள்ளது. இப்பணியிடங்கள் முற்றிலும் தாற்காலிகமாகவும், மாதந்தோறும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாகும். இதற்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்றும், தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இளநிலை சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். அதோடு, எம்.எஸ் ஆபிஸ் கணிப்பொறியில் சான்றிதழ் பெற்றி்ருப்பது விரும்பத்தக்கது. இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 வயதாகும்.

இதற்கான விண்ணப்பங்களை விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக வளாகத்திலும் மற்றும் www.chiefeducationalofficer.in என்ற முகவரியிலும் வருகிற 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற ஜூன்-6ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து இப்பணிக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 13-ம் தேதி ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட இருக்கிறது.

    அதனால் இம்மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.