விருதுநகரில் சார்பு-ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 4057 பேர் எழுதினர்
விருதுநகரில் உள்ள 5 மையங்களில் சனிக்கிழமை நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 4057 பேர் பங்கேற்று எழுதினர்கள்.


விருதுநகரில் உள்ள 5 மையங்களில் சனிக்கிழமை நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 4057 பேர் பங்கேற்று எழுதினர்கள்.
தமிழ்நாடு காவல்துறையில் காலியாகவுள்ள காவல் துறை சார்பு-ஆய்வாளர் பணிக்கான ஆள்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறது.
அதன் அடிப்படையில் விருதுநகரில் இதற்கான முதல் கட்ட எழுத்துத் தேர்வுக்கு ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி, வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, செந்திக்குமார நாடார் கல்லூரி, கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இத்தேர்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டதாரிகள் மையங்களுக்கு ஆர்வத்துடன் முன்னதாகவே வந்து குவிந்தனர்.
இம்மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுதுவதற்காக 4672 விண்ணப்பத்திருந்த நிலையில் 4057 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வை எழுதினர். இதில், 615 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இத்தேர்வு நடைபெற்ற கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டி.ஐ.ஜி ஆனந்த் குமார் சோமானி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் தேர்வு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...