கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி பருவத்தேர்வுகளை கேமரா மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அதன் துணைவேந்தர் ஜி. ஜேம்ஸ் பிச்சை.
திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
நாட்டிலுள்ள 751 பல்கலைக்கழகங்களில், கல்வி வழங்குவதிலும், தரக்கட்டுப்பாட்டிலும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 29-வது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 5 புதிய படிப்புகளைத் தொடங்கியிருக்கிறோம். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு மூலம் அதிகளவில் நிதியுதவி பெற்று பல்வேறுப் படிப்புகளுக்கு பயன்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி குறித்த படிப்புகளை வழங்கி வருகிறோம். இந்த நிறுவனம் 2-வது திட்டத்தின் கீழ் ரூ.53 கோடி நிதியை பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழகம்மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளில் என 670-க்கும் மேற்பட்ட தொலைநிலைக் கல்வி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களின் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி கூடத்தின் கிளை அலுவலகம் திருச்சியில் இயங்கி வருவதாகவும், அதற்கு பல்வேறு பணிகளுக்கான பணி நியமனம் செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பல்கலைக்கழகத்துக்கு எந்த ஊரிலும் கிளை அலுவலகம் கிடையாது.
ஏதாவது பெயரில் நேர்முகத்தேர்வு, பணி நியமனம் நடைபெற்றால் அது போலியானது என்றும் தேர்வு நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
தேர்வுகள் கேமரா மூலம் பதிவு: தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு,. கட்டுóப்பாட்டு அறையிலிருந்து தேர்வுகள் கண்காணிக்கப்படும். இந்த வசதி வரும் பருவத் தேர்வு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதுபோல, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை ஆன்லைன் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் ஜேம்ஸ் பிச்சை. பேட்டியின் போது, பல்கலைக்கழகப் பதிவாளர் கே.ஜி. செந்தில்வாசன், தொலைநிலைக் கல்வி மைய தேசிய ஒருங்கிணைப்பாளர் பி. வெங்கடாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

