திருச்சுழி அருகே ஊராட்சி செயலரை தாக்கியதாக வார்டு உறுப்பினர் மீது புகார்
திருச்சுழி அருகே ஊராட்சி செயலரை தாக்கியதாக வார்டு உறுப்பினர் மீது எம்.ரெட்டியபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


திருச்சுழி அருகே ஊராட்சி செயலரை தாக்கியதாக வார்டு உறுப்பினர் மீது எம்.ரெட்டியபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சிவநாராயணசாமி(45). இவர் இக்கிராம ஊராட்சியின் செயலாளராக இருந்து வருகிறார். இதே ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் கிருஷ்ணகுமார்(42). இந்நிலையில் புதன்கிழமை அக்கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த செயலாளரிடம், விலையில்லா பொருள்களுக்கான டோக்கன் வழங்கப்பட இருக்கிற விவரங்களை வார்டு உறுப்பினர் கேட்டதற்கு வழங்க மறுத்தாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த வார்டு உறுப்பினர் கிருஷ்ணகுமார், சிவநாராயணசாமியை கல்லால் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாம்.
இது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் சிவநாராயணசாமி புகார் செய்தார். அதன் பேரில் வார்டு உறுப்பினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...