இந்நிலையில் 1986 முதல் 2011 வரையில் 26 ஆண்டுகள் தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. அதையடுத்து, கடந்த 2011-12ல் 3-ம் இடத்திற்கும், 2012-13ல் 5-ம் இடத்திற்கும், 2013-14ல் 4-ம் இடமும் பெற்று பின்தங்கியது. இந்நிலையில், கடந்த 3 கல்வி ஆண்டுகளாக தவறவிட்ட முதலிடத்தை பிடிக்க வேண்டும். இதற்காக மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு ஆசிரியர்கள் மூலம் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாசிப்பதிலும், படிப்பில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து தனிக்கவனம் செலுத்தி ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் அளவிற்கு ஆசிரியர்களால் சிறப்பு பயிற்சியும் அளித்துள்ளனர்.