/

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மருந்தாளுநர் காலியிடங்களுக்கு பரிந்துரை

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மரு ந்தாளுர் பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:32 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மரு ந்தாளுர் பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் மருந்தாளுநர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு அங்கிகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் மருந்தாளுநர் படிப்பில் பட்டயம் பெற்று, தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். இதற்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

முன்னுரிமை பிரிவினர்: மாற்றுத்திறனாளிகள் அனைத்து பிரிவினரும் நாளது தேதி வரையிலும், இதர முன்னுரிமை பிரிவினர் (ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர்)- நாளது தேதி வரையிலும், எஸ்.சி(பொது) கலப்பு திருமணம் புரிந்தோர்-9.10.2007, எஸ்.சி.எ(பெண்கள்), ராணுவத்தினைச் சார்ந்தோர், ராணுவத்தில் பணிபுரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு-3.3.2006, எம்.பி.சி(பொது) ராணுவத்தினைச் சார்ந்தோர், ராணுவத்தில் பணிபுரிந்தோர், முன்னாள் ராணுவத்தினை சார்ந்தோருக்கு-6.2.2008, பி.சி(பொது) ராணுவத்தினைச் சார்ந்தோர், ராணுவத்தில் பணிபுரிந்தோர், முன்னாள் ராணுவத்தினைச் சார்ந்தோருக்கு-4.4.1997, ஓ.சி(பொது) ராணுவத்தினைச் சார்ந்தோர், ராணுவத்தில் பணிபுரிந்தோர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தோர்-11.4.2005 வரையிலும் இருக்க வேண்டும்.

முன்னுரிமையற்றோர் பிரிவினர்: எஸ்.சி(அருந்ததியர்)-5.3.2004, எஸ்.சி-9.2.2000, எம்.பி.சி(பெண்கள்)-7.4.1997, எம்.பி.சி(ஆண்கள்)-24.1.1993, பி.சி(பொது), ஓ.சி(பெண்கள்)-18.10.1993, பி.சி(பொது), ஓ.சி(ஆண்கள்)-26.3.1992,பி.சி.எம்.(பெண்கள்)-10.9.1996, பிசிஎம்(ஆண்கள்)-20.5.1991 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பதிவு மூப்புடைய அனைத்து பதிவுதாரர்களும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட  அடையாள அட்டை, அசல் கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 19-ம் தேதி வரவேண்டும். அங்கு தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை நேரில் அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.