/

மாநில அளவிலான பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணிநேரம் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாநில அளவிலான பொதுசுகாதாரத்துறை

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:32 am

எஸ். பாண்டியன்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 72 மணிநேரம் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாநில அளவிலான பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் மாநில அளவிலான பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் க.கங்காதரன் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் வி.மோகன், மாநில செயலாளர் ச.கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இதில், தகுதியின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சுகாதாரத்துறையும், இயக்குநர் அலுவலகமும் அமுல்படுத்த வேண்டும். 186 பேரின் சுகாதார ஆய்வாளர் பதவியிலிருந்து, வட்டார சுகாதார ஆய்வாளராக பதவி உயர்வு அளித்ததை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி அரசுக்கும், சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கும் கோரிக்கை மனுக்கள் அளிப்பது, நிறைவேற்றாவிட்டால் ஜூன் முதல் வாரத்தில் மாவட்ட தலைமையிடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் ஜூன் இறுதி வாரத்தில் சென்னை சுகாதாரத்துறை அலுவலக வளாகம் முன்பு தொடர்ந்து 72 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இச்செயற்குழு கூட்டத்தில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.