விருதுநகர் மாவட்டத்தில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் மீன் வளத்துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


விருதுநகர் மாவட்டத்தில் மீன் வளத்துறையில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:
விருதுநகர் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீன்வள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இனசுழற்சி அடிப்படையில் பொது போட்டியில் நிரப்புவதற்கு பட்டியல் பெறப்பட்டுள்ளது.இப்பணிக்கு 1.7.2014ல் உள்ளபடி எஸ்.சி, எஸ்.டி ஆகியோருக்கு 35 வயதும், எம்.பி.சி, பி.சி ஆகியோருக்கு 32 வயதிற்குள்ளும், ஓ.சிக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பணிக்கு தமிழில் எழுத படிக்கவும், நீந்துதல், மீன்பிடித்தல், வலைபின்னுதல் ஆகியவை கட்டாயம் தெரிந்தவராக இருக்க வேண்டும். அதோடு, மீன்வளத்துறையிலுள்ள மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுடையோர் விண்ணப்பத்தினை தங்களது கல்வி சான்றுகள், குடும்ப அட்டை, ஜாதி, வயது ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம், மீன்வளத்துறை துணை இயக்குநர்(மண்டலம்) அலுவலகம், பேச்சியம்மன் படித்துறை சாலை, மதுரை-6251 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...