விருதுநகர் மாவட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பெற சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தோட்டக்கலை துணை


விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பெற சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தோட்டக்கலை துறையின் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த நீர் ஆதாரத்தை கொண்டு விளைநிலங்களில் அதிக மகசூல் பெற்று பயனடையும் வகையில் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இக்கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அங்கு தங்களின் விளைநில ஆவணங்களின் நகலுடன் விண்ணப்பிக்கலாம். அதைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் விளைநிலங்களில் மண் பரிசோதனை மேற்கொண்டு, தகுதியின் அடிப்படையில் சொட்டு நீர்ப்பாசனம் மானியத்தில் அமைக்க சிறு குறு விவசாயிகள் தேர்வு செய்யப்படவும் இருக்கின்றனர். எனவே சொட்டு நீர்பாசனம் அமைத்து குறைந்தளவு கொண்ட நீர் ஆதாரம் மூலம் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...