/

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

விருதுநகர் அருகே கௌசிகா ஆற்று குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு யார் என தீவிரமாக  விசாரணை செய்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கௌசிகா ஆற்று குளத்தில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு யார் என தீவிரமாக  விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி கௌசிகா ஆற்று ரயில் பாலத்திற்கு கீழே சிறுவர்கள் விளையாடுவதற்காக புதன்கிழமை மாலையில் சென்றார்களாம். அப்போது, குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளதை பார்த்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக உடனடியாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்பு துறை ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து குளத்திற்குள் மிதந்த ஆண்சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சடலத்தை கொண்டு சென்றனர். மேலும், குளத்தில் சடலமாக கிடந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.