/

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை வளர்போருக்கு மானிய விலையில் தீவனம் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர்கள்   பயனடையும் வகையில் மானிய விலையில் வைக்கோல் தீவனம் வழங்குவதற்காக  அரசு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர்கள்   பயனடையும் வகையில் மானிய விலையில் வைக்கோல் தீவனம் வழங்குவதற்காக  அரசு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இம்மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி ஆகிய இடங்களில் அரசு கால்நடை மருந்தகங்களில் தலா ரூ.5 லட்சம் செலவில் உலர் தீவன கிடங்குகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. எனவே தீவனம் தேவைப்படுவோர் தங்களது குடும்ப அட்டை நகலுடன் மேற்கண்ட இரு கால்நடை மருந்தகங்களிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எனவே இம்மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள தீவன கிடங்குகளுக்கு தனித்தனியாக தரமான உலர்ந்த வைக்கோலை 21 கிலோ கட்டுக்களாக கட்டி வண்டியில் ஏற்றி குறிப்பிட்ட இடங்களில் அடுக்கி வைக்கோல் போர் போட்டுத்தர வேண்டும். அதேபோல், தொடர்ந்து 2 மாதங்களுக்கு வழங்க விருப்பம் உள்ள விவசாயிகள் ஒரு கிலோ வைக்கோல் விலையை குறிப்பிட்டு வருகிற 19ம் தேதி மாலை 5 மணிக்குள் விலைப்புள்ளிகளை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.  

மேலும், இது குறித்து மண்டல இணை இயக்குநரை 9445001132 என்ற செல்லிட பேசியிலும், 04562-252706 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.