விருதுநகர் அருகே இளம்பெண் மாயம் தாயார் புகார்
விருதுநகரில் சகோதரரி வீ்ட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இளம்பெண்ணை காணவில்லையென தாயார் காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை புகார் செய்தார்.


விருதுநகரில் சகோதரரி வீ்ட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இளம்பெண்ணை காணவில்லையென தாயார் காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை புகார் செய்தார்.
விருதுநகர் அருகே பெரியார் நகரைச் சேர்ந்த மாரீஸ்வரியின் மகள் ஜோதி(17). இவர் திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தாராம். தற்போது, பொங்கல் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் அருகில் உள்ள சகோதரரி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றாராம். அதையடுத்து நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் தோழி வீடுகளில் விசாரித்துள்ளனர். ஆனால், அதில் அவர் எங்கிருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லையாம். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தாயார் மாரீஸ்வரி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...