மக்கள் குறைதீர் கூட்டத்தில் 98 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.45 லட்சத்தில் 98 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3.45 லட்சத்தில் 98 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், தனிநபர் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதையடுத்து, அதிகாரிகள் உடனுக்குடன் தங்கள் துறை தொடர்பான கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மீது அளிக்கப்பட்டவரின் கிராமத்திற்கு நேரில் சென்று உண்மைத் தன்மையை அறிந்து கொண்டே பின்னரே மேல் பரிந்துரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அலுவலர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.2.62 லட்சத்தில் 80 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும், 18 பேருக்கு ரூ.81,882 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளையும் ஆட்சியர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...