ஜெயலலிதா விடுதலை: விருதுநகரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
:சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அறிவுப்புகள் வெளியானதை தொடர்ந்து விருதுநகரில் அதிமுகவினர்


:சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அறிவுப்புகள் வெளியானதை தொடர்ந்து விருதுநகரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதோடு, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகவும் சென்றனர்.
பெங்களூரு நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கில் திங்கள்கிழமை காலையில் 11 மணி அளவில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்து தண்டனைகளில் இருந்தும் விடுவிக்க்கப்பட்டார் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் விருதுநகர் நகர ஒன்றிய அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளையும் வழங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத் தலைவர் கி.கலாநிதி, நகராட்சி தலைவர் மா.சாந்தி ஆகியோர் தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக அதிமுகவினர் பேரணியாகச் சென்றனர். இதில், நகரச்செயலாளர் முகமதுநெயினார், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் மூக்கையா, மாவட்ட அவைத் தலைவர் ஐ.மருது, மொத்த கூட்டுறவு பண்டகசாலையின் தலைவரும், முன்னாள் இளம் பாசறை செயலாளர் வெங்கடேஷ், நகராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...