தந்தையை தாக்கிய மகன்கள் கைது
விருதுநகரில் சொத்தை பிரித்து தராத தந்தையை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பாக மகன்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.


விருதுநகரில் சொத்தை பிரித்து தராத தந்தையை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பாக மகன்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் ஏ.கே சாலைப்பகுதியைச் சேர்ந்தவர் புன்னைவனம்(72). இவருக்கு சொந்தமான குடியிருப்பை மகள்களான பாண்டிமணி(39), ஹரிஹரபாண்டி(36) ஆகியோர் பிரித்து தங்கள் பெயருக்கு மாற்றித் தர கேட்டார்களாம். அதற்கு புன்னைவனம் சம்மதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தந்தையை கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தினர்களாம். இது தொடர்பாக புன்னைவனம் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தி்ல் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மகன்கள் 2பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...