/

விருதுநகர் அருகே கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது

சாத்தூர் அருகே கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 3 பேரை மதுரை திட்டமிட்ட புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீஸார் செவ்வாய்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:27 am

எஸ். பாண்டியன்

சாத்தூர் அருகே கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 3 பேரை மதுரை திட்டமிட்ட புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீஸார் செவ்வாய்கிழமை இரவு கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த சதுரகிரி, சிவகாசி லூர்துசாமி, ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முகவர் முருகேசன் ஆகியோர் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டு வருவதாக மதுரை திட்டமிட்ட புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சாத்தூரில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு செவ்வாய்கிழமை இரவு சென்ற நுண்ணறிவு பிரிவு போலீஸார் சுற்றி வளைத்து 3 பேரையும் பிடித்தனர்.

அப்போது, சதுரகிரியும், லூர்துசாமியும் கள்ளநோட்டுக்களை அச்சடிப்பவர்கள் என்பதும், அதில் முகவர் முருகேசன் புழக்கத்தில் விட ஆள்பிடிப்பவர் என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 50 எண்ணத்தில் 500 ருபாய் கள்ள நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இப்பிரிவினர் மதுரை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.