/

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே நடைபெற இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நடைபெற இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கோப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டியின் 17 வயது மகளுக்கும், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தின் மகன் கண்ணன்(25) என்பவருக்கும் வருகிற 10-ம் தேதி திருமணம் நடத்துவதற்காக புதன்கிழமை பெரியோர்களால் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இது தொடர்பான தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமனுக்கு தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினரும் நேரில் கிராமத்திற்கு சென்றனர். அக்கிராமத்திற்கு மாலையில் சென்ற அதிகாரிகள் அங்கு இருவீட்டாரையும் சந்தித்து பேசியுள்ளனர். அதைத் தொடர்ந்து பெண் வீட்டாரிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட வயதை அடையாத நிலையில் திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். அதனால், குறிப்பிட்ட வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறி எழுதி வாங்கினர். பின்னர் சிறுமியை அழைத்து வந்து பாண்டியன் நகரில் உள்ள பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.