/

விருதுநகரில் 100-வது பிறந்த நாள் கொண்டாடிய சுதந்திர போராட்ட தியாகி

விருதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி தனது உறவினர்களுடன் 100 வது பிறந்தநாளை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்கிழமை கொண்டாடினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:26 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி தனது உறவினர்களுடன் 100 வது பிறந்தநாளை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்கிழமை கொண்டாடினார்.

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.சி.ராமசாமி(101). இவரது மனைவி மகாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவரது 4 மகன்களில் 3 பேர் சிங்கப்பூரில் தொழில் செய்தும் மற்றொரு மகன் கடலூர் அரசு மருத்துவமனையில் மருதாளுநர் பிரிவில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இவர் 5.5.1915ல் பிறந்து, தனது 15-வயதில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வேலை தேடி சிங்கப்பூருக்கு சென்றாராம். அங்கு கப்பல் துறைமுகத்தில் தொழிலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றினாராம். அப்போது, நேதாஜி சுபாசந்திரபோஸ் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஐ.என்.எ படையில் சேர்ப்பதை அறிந்தார்.

அப்போது, இந்திய சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என்ற ஆர்வம் இருந்த காரணத்தால் இவரும் அப்படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது, இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போரிடும் போது படைபலம் குறைந்ததால் பிடிப்பட்டனர். அதில் வி.சி.ராமசாமியும் பிடிபட்டு ரங்கூனில் 13 மாதம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அதையடுத்து, இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் இவரும் ஒருவர் ஆவார். ஐ.என்.எ படையில் பணியாற்றியதற்காக இவருக்கு மத்திய அரசிடமிருந்து மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.20 ஆயிரமும், மாநில அரசிடமிருந்து ரூ.1000ம் பெற்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அதையடுத்து அவரது உறவினர்கள் விருதுநகர் திருவேங்கடம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். தற்போது, பூரண குணமடைந்த அவர் தனது 100-வது பிறந்த நாளை மருத்துவமனை வளாகத்தில் தனது உறவினர்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இது குறித்து வி.சி.குருசாமி கூறுகையில், சைவ உணவைத்தான் உள்கொள்வேன்.  அதனால் நான் 100 வயதை எட்டியுள்ளேன். அதேபோல், பிறருக்கு எவ்வித தொந்தரவும் இல்லாத வகையில் மனநிறைவோடு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.