விருதுநகரில் அரசு மதுபானக்கடைக்கு பொதுமக்கள் பூட்டு போடும் போராட்டம்
விருதுநகரில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு மதுபானக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.


விருதுநகரில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு மதுபானக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் பாத்திமாநகர் ஆற்றுப்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் எந்நேரமும் பொதுமக்கள் கூட்டம் இருக்கும். இங்கு மது குடிக்க வரும் குடிமகன்கள் போதையுடன் பேருந்து நிறுத்தப் பகுதிக்கு வருகின்றனர். அதோடு, தகாத வார்த்தைகள் பேசுவதால் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
அதோடு, பாத்திமா நகர் பகுதிக்குள்ளும் வந்து பெண்களிடமும் தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே இக்கடையை உடனே அகற்ற வலியுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லட்சுமி தலைமையில், இந்திய ஜனாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவராமன் முன்னிலையிலும் மதுபானக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விருதுநகர் காவல் துறை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, டாஸ்மாக் மேலாளர் ரவிசந்திரன், பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராமநாராயணன், சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை கலைந்து போகும் படி எச்சரிக்கை செய்தனர்.
அதையடுத்து, போலீஸாருக்கும்-பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், பொதுமக்கள் இக்கடையை உடனே அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் 20 நாள்களுக்குள் இடமாற்றம் செய்யப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் சுமார் 4 மணிநேரம் நீடித்த காரணத்தால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...