சிறார் திருமணம் தடுத்து நிறுத்தம்: சிறுமியின் தந்தை உள்பட 6 பேர் கைது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே சிறார் திருமணம் தடுத்து நிறுத்தம். அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்ததாக 25 மீது வழக்குப் பதிந்த பாடாலூர் போலீஸார், சிறுமியின் தந்தை உள்பட 6 பேரை


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே சிறார் திருமணம் தடுத்து நிறுத்தம். அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்ததாக 25 மீது வழக்குப் பதிந்த பாடாலூர் போலீஸார், சிறுமியின் தந்தை உள்பட 6 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நக்கசேலம் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த களியமூர்த்தி மகள் 15 வயது சிறுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் ராசுக்குட்டிக்கும் (21), நிச்சியிக்கப்பட்டு திங்கள்கிழமை காலை திருமணம் நடைபெற இருந்தது. தகவலறிந்த ஈச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இந்திராணி, திருமண வீட்டுக்கு சென்று குழந்தை திருமணம் செய்யக்கூடாது என தெரிவித்தாராம்.இதனால் ஆத்திரமடைந்த திருமண வீட்டார் கிராம நிர்வாக அலுவலரை அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் இந்திராணி அளித்த புகாரின் பேரில், பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மும்தாஜ், பணி செய்யவிடாமல் தடுத்ததாக சிறுமியின் தந்தை, சகோதரர்கள், மணமகனின் தாய் மீனாட்சி உள்பட 25 பேர் மீது வழக்குப் பதிந்தார். இந்நிலையில், சிறுமியின் தந்தை களியமூர்த்தி (60), தாய் லட்சுமி (50), சகோதரர்கள் ராஜா (27), ரஜினி (29), உறவினர்கள் மீனா 23), மணிகண்டன் (25) ஆகியோரை கைது செய்த போலீஸார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...