தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

புதிய தமிழகம் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 129 பேர் கைது

விருதுநகரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சியினர் 129 பேரை சூலக்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:03 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சியினர் 129 பேரை சூலக்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கொம்பன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், இப்போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை.எனவே இத்தடையை மீறி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை காவல் நிலைய போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 129 பேரையும் கைது செய்து தனியார் அரங்கத்தில் பாதுகாப்புடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.