தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் உரிய ஆவணங்களுடன் கருவூலங்களில் ஆஜராக உத்தரவு

மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும், ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:03 am

எஸ். பாண்டியன்

மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும், ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு:

மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறுவோருக்கு நிகழாண்டுக்கான நேர்காணல் ஏப்ரலில் தொடங்கி ஜூன் 15-ம் தேதி  வரையில் வங்கி வாரியாக நடைபெற இருக்கிறது. மேலும், ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு வருகிற போது ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண், இ.மெயில் முகவரி மற்றும் மறுமணம் புரியா சான்று ஆகியவைகளின் நகல்களுடன் ஆஜராக வேண்டும்.

இதில், பாரத ஸ்டேட் வங்கியில் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஏப்.1-ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இதர வங்கிகளில் ஓய்வூதியம் பெறுவோர் ஏப்.16-ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் கருவூலத்தில் ஆஜராக வேண்டும். அதைத் தொடர்ந்து மே-1 முதல் 30ம் வரையில் அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்போர் மற்றும் விடுபட்டோர் சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் நேரில் ஆஜராக வேண்டும். மேலும், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்குறிப்பிட்ட 5 ஆவணங்களின் நகல்களை ஓய்வூதிய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த நகல்களில் ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ அந்த  ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.