லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சேத்துப்பட்டு பஸ் நிறுத்தத்தில் விவசாயிடம் பணம் கொள்ளை: வாலிபர் கைது

ஆரணி அடுத்த சேத்துப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக நின்றிருந்த விவசாயிடம் பணம்

Updated On :26 மார்ச் 2015, 5:40 am

ஆரணி அடுத்த சேத்துப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக நின்றிருந்த விவசாயிடம் பணம் கொள்ளை அடித்த வாலிபரை சேத்துப்பட்டு போலீஸார் கைது செய்தனர்.

சேத்துப்பட்டு அடுத்த நரசிங்கராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன்(49) என்பவர் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டிக்கு சென்று நெல்லை விற்பனை செய்துவிட்டு அவரது கிராமத்திற்கு செல்ல செவ்வாய்கிழமை இரவு சேத்துப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தார்.

அப்போது விவசாயி வெங்கடேசனிடம் இருந்த பணத்தை ஒருவன் கொள்ளை அடித்துக்கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் சேத்துப்பட்டு போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் சேத்துப்பட்டு லூர்துநகர் சேர்ந்த மைக்கேல் மகன் பிலிப்(26) என்பவர் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனால் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பஜாரில் சுற்றித்திரிந்துகொண்டிருந்த பிலிப்பை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணம் ரூ.4 ஆயிரத்தினை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.