தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

ராஜபாளையம் பகுதியில் அனுமதியின்றி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தியதாக இளைஞரை குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:01 am

எஸ். பாண்டியன்

ராஜபாளையம் பகுதியில் அனுமதியின்றி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தியதாக இளைஞரை குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், தெற்கு தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த கொடிமாடன் என்பவரின் மகன் முருகன்(35). இவர் சாஸ்தா கோயில் அணை பகுதி மற்றும் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தியதாக சேத்தூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.