விருதுநகர் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேர் கைது
வேலைகேட்டுப் போன பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து இளம்பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார்


வேலைகேட்டுப் போன பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து இளம்பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர்.
விருதுநகர் அருகே குல்லூர்சந்தையைச் சேர்ந்த கணேசனின் மகள்(22). இவருக்கு சூலக்கரையைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் திருமணமாகி, பிரச்னையால் பெற்றோர் வீட்டிலேயே இருந்தாராம். இவர் கடந்த பிப்.15-ல் திடீரென மாயமானார். இது குறித்து சூலக்கரை போலீஸில் தந்தை கணேசன் புகார் செய்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் அவரது செல்லிடப்பேசியில் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்ததில் சிக்னல் கிடைக்கவே, விசாரித்ததில் கோவில்பட்டியில் இருந்து பேசியது தெரிந்தது. அங்கு விசாரித்ததில் மாயமான பெண்ணின் செல்பேசி மற்றொரு பெண்ணிடம் இருந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் தெரிவி்த்தார். மாயமான பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்பே தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் இருந்ததும், அவரைச் சந்திக்கவே கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்த 5 சவரன் நகை, ரொக்கப்பணத்துடன் சென்றாராம்.
அந்த இளைஞரை சந்திக்க முடியாத நிலையில் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு பாண்டி என்பவரை அணுகி வேலை கேட்டதும், அவர் அப்பெண்ணை அதே பகுதியில் அந்தோணிராஜ்(55), மாரியம்மாள்(50) ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இருவரும் செண்பகவல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்வதியிடம் ஒப்படைத்தனர். அவர் இளம்பெண்ணிடம் இருந்த பணம், நகை மற்றும் செல்பேசி ஆகியவைகளை பறித்து கொண்டதோடு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தியுள்ளார். சில நாள்களுக்கு பின் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
உடனே சூலக்கரை காவல் ஆய்வாளர் எஸ்.அன்னராஜ் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். எனவே வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்தோணிராஜ், மாரியம்மாள் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாண்டி, பார்வதி ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...