தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே மருமகனை மிளகாய் பொடி தூவி தாக்கிய மாமனார்: 3 பேர் மீது வழக்கு 

விருதுநகர் அருகே மருமகனை மிளகாய் பொடி தூவி தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் தலைமறைவான மாமனார் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:00 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மருமகனை மிளகாய் பொடி தூவி தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் தலைமறைவான மாமனார் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே இ.முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த இன்னாசிமுத்து மகள் சுகன்யா(25). இவருக்கும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து கோபித்துக் கொண்டு சுகன்யா தந்தை வீட்டிற்கு வந்தாராம். அதைத் தொடர்ந்து சுகன்யாவை அழைத்துச் செல்வதற்காக ராஜாவும் திங்கள்கிழமை இரவு வந்தாராம். அப்போது, அங்கு  அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியதில் மாமனார் இன்னாசிமுத்து, அவரது உறவினர்கள் ஆகியோர் சேர்ந்து மருமகன் ராஜா மீது மிளகாய் பொடி தூவி தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். அதன் அடிப்படையில் தலைமறைவான மாமனார் இன்னாசிமுத்து(50), உறவினர்களான மணிராஜ்(25) மற்றும் மாரிமுத்து(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.