தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை

விருதுநகர் அருகே திருக்கோயிகளுக்கு சொந்தமான பொது இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவி ஆடை அணிந்து திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:00 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே திருக்கோயிகளுக்கு சொந்தமான பொது இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவி ஆடை அணிந்து திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் அருகே உள்ளது பாவாலி ஊராட்சியைச் சேர்ந்த அய்யனார் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சக்திவேல்(30). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஆட்சியர் அலுவலகத்தில் காவி உடைந்து அணிந்து கையில் வேல் மற்றும் திருவோடு ஏந்தி அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் பிச்சை எடுக்க தொடங்கினார். யாரோ சாமியார் என நினைத்து பொதுமக்களும் பிச்சை போட தொடங்கினர். அதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் போலீஸாரிடம் கூறுகையில், பாவாலி ஊராட்சியைச் சேர்ந்த அய்யனார் நகரில் குகன் கோயில், பச்சையம்மன் கோயில், அய்யனார் கோயிலுக்கு சொந்தமான புன்செய், நன்செய் நிலங்களை ஒரு சிலர் ஆக்கிரமித்து போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதை தடுக்க வலியுறுத்தி  ஆட்சியரிடம் மனு அளிக்க செல்வதாக குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து உடனே காவி உடையை மாற்றிக் கொண்டு ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு போலீஸார் அனுமதித்தனர். எனவே விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளரின் செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.