விருதுநகர் பகுதியில் குண்டும், குழியுமான தார்ச்சாலைகளால் பொதுமக்கள் அவதி
விருதுநகர் பகுதியில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமான தார்ச்சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருவதாக புகார்


விருதுநகர் பகுதியில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமான தார்ச்சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் பகுதி கிராமங்களில் இருந்து 4 வழிச்சாலை மற்றும் முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டன. இச்சாலைகளால் பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் நெடுஞ்சாலைகளை எளிதாக சென்றடைந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
அந்த வகையில் செங்குன்றாபுரம்-வடமலைக்குறிச்சி சாலை, வீரார்பட்டி-பொம்மையாபுரம்-சுந்தரலிங்காபுரம், மருளூத்து-மீனாட்சிபுரம், மருதநத்தம்-எரிச்சநத்தம், 4 வழிச்சாலை இணைக்கும் வகையில் சத்திரப்பட்டி-உசிலம்பட்டி, கருப்பசாமி நகர்-சத்திரப்பட்டி, பெரியதாதம்பட்டி-ஒண்டிப்புலிநாயக்கனூர், மன்னார்கோட்டை-காளப்பெருமாள்பட்டி-புதுப்பட்டி, மீசலூர்-தாதம்பட்டி, மேலமடை-பாலவநத்தம்-பொட்டல்பட்டி-வாழந்தாள்புரம், வச்சக்காரப்பட்டி-சத்திரம்-ராமக்குடும்பன்பட்டி, செவல்பட்டி-மாடர்ன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் உள்பட பல்வேறு சாலைகள் கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் காணப்படுகிறது.
பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சூலக்கரை-தாதம்பட்டி-ஒண்டிப்புலிநாயக்கனூர் சாலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், காய்கறிகள் கொண்டு செல்லும் விவசாயிகள் பட்டாசு ஆலை தொழிலாளர் வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனங்கள் இடையிலேயே பழுதாகி நின்று விடுகிறது. அதேபோல், மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லூரி பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இச்சாலை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்தின் ஒட்டுநர் ரெங்கையா கூறுகையில், இச்சாலையை சீரமைத்து 14 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த மார்க்கத்தில் கிராமங்கள் அதிகம் உள்ளன. அதேபோல், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளுக்கு குறுக்கு வழியாகவும் பயன்படுத்துகின்றனர். தற்போது கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்களாக இருப்பதால் திடீரென டயர் வெடித்தும், பட்டை உடைந்தும் பழுதாகி விடுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு டிரிப் எடுக்க முடியாத நிலையிருக்கிறது. அதனால் அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...