பாம்பாற்றின் குறுக்கே கேரள அணைக்கட்டும் பிரச்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாது மணலுக்கான டெண்டர் ஒருவருக்கே விடப்பட்டு பெரும் ஊழல் நடந்துள்ளது. கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்கும் சகாயம் குழுவினர் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். மின்துறையில் யூனிட் ரூ.2.90-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.13.10 கொடுத்து வாங்கி ரூ.12,000 கோடிவரை ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் 18 துறைகளில் நடந்துள்ள ஊழல் குறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக்கூறியுள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டணம் இல்லாத கல்வி, சமச்சீர் கல்வியை சிபிஎஸ்ஐக்கு இணையாக உயர்த்துதல், கனடா நாட்டில் உள்ளது போன்று சுகாதாரம் கொண்டு வருவோம். ஏற்கனவே நான் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த போது ஒரு லட்சம் பிரசவத்தில் 300 ஆக இருந்த இறப்பு 212 ஆக குறைந்தது. தற்போது 167 ஆக உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 1 லிட்டர் பால் இலவசமாக கொடுப்போம். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடுவோம். ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வருவோம். லோக்ஆயுக்தாவை 6 மாதத்தில் கொண்டு வருவோம். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்போம். கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 வழங்குவோம். சிறுகுறு விவசாயிகளுக்கு 5ஹெச்பி சோலார் மோட்டார், இலவச இடுபொருட்கள் கொடுப்போம். தொழில்முனைவோருக்கு வேலைவாய்ப்பு, அதுவும் கிராமப்புறத்தில் தொடங்கும் தொழிலுக்கு 80சதவீத மானியம் வழங்குவோம். தமிழக நிதிநிலை ரூ.4 லட்சம் கோடி கடனில் உள்ளது.
கேரளாவில் பாம்பாற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தி, இப்பிரச்னையை ஆளுங்கட்சி பிரச்னை என கருதாமல் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக ஜாதிக்கட்சி கிடையாது. பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. திமுக, அதிமுகவைத் தவிர எக்கட்சியும் பாமகவின் தலைமையில் இணையலாம். இலங்கை பிரதமர் ரணில்விக்ரமசிங்கே பேச்சு கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும். அங்குள்ள தமிழர்கள் பகுதியில் இருந்த ராணுவம் வெளியேற்றப்படுதல் வேண்டும். 108 ஆம்புலன்ஸ்சுக்கான நிதியை மத்திய அரசு வழங்குகிறது. இதனை மாநில அரசு முறையாக பராமரிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


