திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மதுரை: மகனால் தாக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி சாவு

மதுரையில் மகனால் கத்திரிக்கோலால் குத்திக் காயமடைந்த தாய் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:52 am

ஜெயப்பாண்டி

மதுரையில் மகனால் கத்திரிக்கோலால் குத்திக் காயமடைந்த தாய் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

மதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி சாந்தி (50). இவர்களது மகன்கள் விக்னேஷ், முருகன். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கல்யாணசுந்தரம் இறந்துவிட்டார். இதனால் குழந்தைகளுடன் இருந்த சாந்தி, அப்பகுதியைச் சேர்ந்த முருகனுடன் நெருங்கிப்பழகிவந்துள்ளார். பரவை மீனாட்சிநகரில் தனி வீடு கட்டி அதில் சாந்தியை முருகன் குடியேற்றியுள்ளார்.

சாந்தி அப்பகுதியில் உள்ள கோபிநாத் என்பவருடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் முருகன் விலக்கிச்சென்றுவிட்டாராம். இதனால் மனம் வருந்தி விக்னேஷ் திருச்சிக்கும், முருகன் குஜராத்துக்கும் சென்றுள்ளனர்.சில நாள்களுக்கு முன்பு மகன்களை அழைத்த சாந்தி இனிமேல் எந்த பிரச்னையுமின்றி இருப்பதாக கூறியுள்ளார். அவர் அழைப்பை ஏற்று விக்னேஷும், முருகனும் மதுரை வந்து பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்துள்ளனர்.

கடந்த 25 ம் தேதி இரவு சாந்தியை கோபிநாத் என்பவர் சந்திக்க வந்தது குறித்து முருகன் கேட்டுள்ளார். இதனால் தாய், மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கத்திரிக்கோல் உள்ளிட்டவற்றால் தாய் சாந்தியை முருகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கரிமேடு போலீஸார் வழக்குப்பதிந்து முருகனைக் கைது செய்தனர்.

மகன் தாக்கி காயமடைந்த தாய் சாந்தியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி உயிரிழந்தார். இதையடுத்து  முருகன் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி கரிமேடு போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.