தவறாக வழக்கில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
உச்சப்புளியில் 6 பேர் குடும்பத்தோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட 5 பேருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற


உச்சப்புளியில் 6 பேர் குடும்பத்தோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட 5 பேருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளழகர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், இவரது மனைவி காளிமுத்து,2 மகன்கள்,2 மகள்கள், கள்ளழகரின் தந்தை கருப்பையா ஆகியோர் குடிசையுடன் தீவைத்துக் எரித்துக் கொல்லப்பட்டனர். 2012 செப்.30 இல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீஸôர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த லூயிஸ்ராஜூ,சுஜாகனி உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர். இதில் சுஜாகனி என்பவர் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை ராமநாதபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரலில் இம்மனு விசாரணைக்கு வந்த போது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, குற்றப்பத்திரிகையில் வலுவான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ராமநாதபுரம் எஸ்பி-க்கு உத்தரவிட்டார். இதன்படி ராமநாதபுரம் எஸ்பி மயில்வாகனன் வியாழக்கிழமை தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் உச்சப்புளியில் சம்பவம் நடந்த இடத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 9 பேர், 108 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 50 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த விசாரணைக்குப்பிறகு வெள்ளைச்சாமி, நாகராஜ், மங்களநாதன், குமார், பஞ்சாட்சரம் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மற்ற 4 பேர் மீதும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனக்குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிக்கையைப் பதிவு செய்த நீதிபதி, விடுவிக்கப்பட்ட 5 பேரும் 93 நாள்கள் சிறையில் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மனித பாதிப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்து தண்டிக்கப்பட்டால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதை கவனத்தில் கொண்டு 5 பேருக்கும் தமிழக அரசு உச்சப்புளியில் 6 பேர் குடும்பத்தோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட 5 பேருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற இழப்பீடு அளிக்க வேண்டும். ராமநாதபுரம் இலவச சட்ட உதவி மையம் மூலம் இந்த நிதியை 2 மாதத்துக்குள் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...