டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மறுகூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் பதிவு எண் பட்டியல் நாளை வெளியீடு

மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த நபர்களின் பதிவு எண் பட்டியல் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட உள்ளது என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி. இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:45 am

கே.​ தர்மராஜ்

மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த நபர்களின் பதிவு எண் பட்டியல் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட உள்ளது என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி. இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதிய, பெரம்பலூர் மாவட்ட மாணவர்களின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்கள் பட்டியல் http:www.dge.tn.nic.in என்ற இணையத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்.

பட்டியலில் இல்லாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில், எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் ஜூன் 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் மேற்கண்ட இணையத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை தெரிவித்து, தங்களுக்கான திருத்தப் பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.