டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே குப்பையில் ரூபாய் நோட்டுக்கள் வீசியது தொடர்பாக போலீஸார் விசாரணை

விருதுநகர் அருகே குப்பையில் செல்லரித்த ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:42 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குப்பையில் செல்லரித்த ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அய்யனார் காலனியில் உள்ள ஆற்றோடை பகுதி குப்பையில் யாரோ அடையாளம் மர்ம நபர்கள் செல்லரித்த மற்றும் கிழிந்த நிலையில் ரூ.1000 நோட்டுக்களை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு  வீசியுள்ளனர். இதை அப்பகுதியைச் சேர்ந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருள்களை பொறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கணேசன், காட்டுராஜா ஆகியோர்  எடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அதில், ரூ.1000 ரூபாய் தாள்கள் கொண்ட 4 கட்டுகள் இருந்துள்ளது.

இதை அப்பகுதி மக்கள் பார்த்து விட்ட நிலையில் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து கிழிந்தும், செல்லரித்து போன ரூ.1000 தாள்கள் கொண்ட 4 கட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரூபாய் தாள்களின் உண்மைத் தன்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் கள்ள நோட்டு இல்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அய்யனார் நகரைச் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் சனிக்கிழமை இரவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், குப்பை மேட்டில் வீசப்பட்ட பணம் கணக்கில் வராத பணமா அல்லது செல்லரித்ததால் வீசினார்களா என்பது குறித்து அப்பகுதியில் தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே 1000 ரூபாய் தாள்கள் கொண்ட 4 கட்டுக்களை வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், இதுவரையில் பணத்திற்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை என வருவாய் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.