திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் அதிகபட்சமாக 71 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், திருச்சி மாவட்டத்திலும், மாநகர்ப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் வெயிலின் அளவு அதிகமாக இருந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டங்கள் அதிகம் கொண்டு காணப்பட்டிருந்தது.
மாலை 6 மணிக்கு மேல் இடி- மின்னலுடன் பெய்யத் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இதனால் இரு சக்கர வாகனங்களில்சென்றோர் அவதிக்குள்ளாகினர். புறநகரிலும் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விமான நிலையப் பகுதியில் 71 மி.மீ. மழை பதிவாகியது. குறைந்த அளவாக வாய்த்தலை அணைக்கட்டில் 0.70 மி.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
திருச்சி விமான நிலையம் - 71 மி.மீ, பொன்மலை - 52, திருச்சி ஜங்ஷன் - 44, பொன்னணியாறு அணை -41.80, லால்குடி -30.20, நவலூர் குட்டப்பட்டு - 24, துவாக்குடி நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம் - 20, மருங்காபுரி - 10.20, கோவில்பட்டி - 8.40, கல்லக்குடி - 6.40, மணப்பாறை - 5, திருச்சி நகரம் - 4.20, நந்தியாற்றுத்தலைப்பு - 1.20, வாய்த்தலை அணைக்கட்டு - 0.70 மி.மீ.
மாவட்டத்தில் மொத்தமாக 319 மி.மீ. மழையும், சராசரியாக 12.70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

