ஏற்கனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர் ஆகியோரிடம் பல்வேறு முறை கோரிக்கை முறையீடு அளிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து மண்டல அளவிலான தர்ணா போராட்டம், மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் உள்ளோம். இதை கண்டுகொள்ளாத காரணத்தால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டாட்சியர், அலுவலக உதவியாளர் வரையில் மேற்குறிபபிட்ட நாள்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.