எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் நகராட்சி பகுதியில் வாக்காளர் மாற்று அடையாள அட்டைபெற அலைகழிப்பதாக பொதுமக்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் தொலைந்த வாக்காளர் அடையாள  அட்டைகளுக்கு பதிலாக மாற்று அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு  வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகராட்சியில் தொலைந்த வாக்காளர் அடையாள  அட்டைகளுக்கு பதிலாக மாற்று அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு  வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

வாக்காளர்கள் அடையாள அட்டைகள் தண்ணீரில் நனைந்தோ, தொலைந்து  மற்றும் சேதமடைந்தலோ மாற்று அடையாள அட்டைகள் பெற விண்ணப்பித்து குறிப்பிட்ட நாள்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மூலமும், நகராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகம் மூலமும் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

அவ்வகையில், விருதுநகர் நகராட்சியைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்டோர் மாற்று வாக்காளர் அடையாள அட்டைகள் பெற புகைப்படத்துடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் ரூ.25 கருவூலத்தில் செலுத்தியதற்கான சீட்டுடன் நகராட்சி  அலுவலரிடம் அளித்தனர். பின்னர் விண்ணப்பித்தோரின் விவரங்களை சரிபார்த்து பதிவு செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலுவலரால் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து மாற்று அடையாள அட்டை நகல் அச்சடித்து 15 நாள்களுக்குள் வழங்குவது நடைமுறையாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பித்து 5 மாதங்களாகியும் மாற்று அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதற்கு நகராட்சி அலுவலர்களோ வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கேட்கும் படி கூறி அலைகழிப்பு செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.  

இது குறித்து மேற்கு ரதவீதியைச் சேர்ந்த ராஜம்மாள்(35) கூறுகையில்,

என்னுடைய வாக்காளர் அடையாள அட்டை தண்ணீரில் நனைந்து சேதமடைந்தது. அரசின் திட்டங்கள் உள்பட பல்வேறு காரியங்களுக்கு அடையாள அட்டையாக வாக்காளர் அட்டை பயன்படுகிறது. அதன் முக்கியத்துவம் கருதி இதற்கு மாற்று அடையாள அட்டை பெறுவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரூ.25 செலுத்தி விண்ணப்பத்திருந்தேன். இதுவரையில் வழங்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நாள்தோறும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், நகராட்சி அலுவலகத்திற்கும் என அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதாக  தெரிவித்தார்.

இது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலக அலுவலர் ஒருவர் கூறுகையில், நகராட்சியில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கருப்பு வெள்ளை அடையாள அட்டைக்கு பதிலாக வண்ணப்புகைப்படத்துடன் வழங்கப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து தகவல் வந்ததும் அடையாள அட்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.