எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் அனைத்து கட்சிகள், வியாபாரிகள் சங்கம் சார்பில் மௌன அஞ்சலி பேரணி

விருதுநகரில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கம் மற்றும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானி, மாணவ, மாணவிகளின் வழிகாட்டியுமான விளங்கிய முன்னாள் குடியரசு தலைவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  விருதுநகர் ரயில்வே நிலையம் முன்பு நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது. இப்பேரணி தேசபந்து மைதானத்தை வந்தடைந்தது. அங்கு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, ஒவ்வொருவரும் மலர் தூவியும் மரியாதை செய்தனர்.

இப்பேரணி நிகழ்ச்சியில் விருதுநகர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ்.யோகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேலாயுதம், நகர தலைவர் வெயிலுமுத்து, த.மா.காவின் வடக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், திமுக சார்பில் திருமாறன், அதிமுக சார்பில் நகராட்சி தலைவர் மா.சாந்தி, கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தேனிவசந்தன், மதிமுக நகர செயலாளர் ராமர், பா.ஜ.க சார்பில் காமாட்சி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, புதிய தமிழகம் நகர செயலாளர் குணாசெல்வம், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல், வி.வி.வி.பெண்கள் கல்லூரி வளாகத்தில் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமையில் பேராசிரியர்கள், நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் மறைந்த அப்துல்கலாமின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் மௌன அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.