எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரேசன் கடையில் முறைகேடு: விற்பனையாளர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்ட பகுதியில் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட பகுதியில் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் அரிசி, கோதுமை ஆகியவைகளை நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யாமல் முறைகேடு செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூரர்த்தி தலைமையில் பறக்கும் படையினர் நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பொருள்களின் இருப்பு குறைவு, பதிவேடுகள் சரியான பராமரிப்பு செய்யாதது உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டறிந்த, அக்கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.28575 வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடும் முறைகேட்டில் ஈடுபட்ட காளையார்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாயவிலைக்கடை விற்பனையாளர் மீது நடவடிக்கைக்கு தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்படி நியாய விலைக்கடையின் விற்பனையாளர் மு.பாண்டியராஜன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.