எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசால் நடப்பு மக்களவை கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து புதன்கிழமை மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:02 am

எஸ். பாண்டியன்

மத்திய அரசால் நடப்பு மக்களவை கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து புதன்கிழமை மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் திட்ட அமைப்பு செயலாளர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். இதில், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் முருகன், பொறியாளர் சங்கத்தின் எஸ்.ராமன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமாக  எடுத்துரைத்தனர்.

அதைத் தொடர்ந்து நடப்பு கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதா-2014 எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இறுதியாக அம்பேத்கார் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கத்தின் நிர்வாகி வீரையா நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் ஐக்கிய சங்கம், காங்கிரஸ் மின் ஊழியர் சங்கம், ஜனதா தொழிலாளர் சங்கம், அம்பேத்கார் ஊழியர்கள் சங்கம், அம்பேத்கார் பொறியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.