விருதுநகர் அருகே குப்பையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சகோதர்கள் படுகாயம்
விருதுநகர் அருகே குப்பையில் கிடந்த பட்டாசு கழிவுகள் திடீரென வெடித்து சிதறியதில் வியாழக்கிழமை இரவு அந்த வழியாக நடந்து சென்ற சகோதரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


விருதுநகர் அருகே குப்பையில் கிடந்த பட்டாசு கழிவுகள் திடீரென வெடித்து சிதறியதில் வியாழக்கிழமை இரவு அந்த வழியாக நடந்து சென்ற சகோதரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் அருகே கன்னிசேரியைச் சேர்ந்த முத்துராஜின் மகன்களான வேல்முருகன்(17), தினேஷ்குமார்(16). இவர்கள் இப்பகுதியில் அரசு பள்ளியில் 11ம் வகுப்பும், 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவு 7.30 மணிக்கு கண்மாய்க்கரை சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கண்மாய் அருகே குப்பையில் கிடந்த பட்டாசு மற்றும் தீப்பெட்டி கழிவுகள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியதில் சகோதர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் பார்த்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது, தீக்காய சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முத்துராஜ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...