திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் அருகே பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:57 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த ஓடைப்பட்டி தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் ஈஸ்வரி(25). இவர் மதுரையில் உள்ள மூத்த வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்று வந்தாராம். மேலும், இவருக்கு அடிக்கடி வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லையாம். இதனால் மன அமைதியை இழந்த அவர் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தாராம். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்களாம்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் பாண்டி கொடுத்த புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பெண் வழக்குரைஞரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.