திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் அருகே குடிபோதையில் விஷம் அருந்திய அரசு ஊழியர் சாவு

விருதுநகர் அருகே மதுவுடன் விஷம் கலந்து அருந்திய அரசு ஊழியர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:56 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மதுவுடன் விஷம் கலந்து அருந்திய அரசு ஊழியர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே குமாரலிங்கபுரம் வள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமணிகண்டன்(40). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் குடிபழக்கம் உடையவர் என்பதால் குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். இந்நிலையில், புதன்கிழமையும் பணி முடிந்து வந்ததும் தகராறு செய்தாராம்.

பின்னர் மன அமைதியை இழந்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் அவர் மதுவுடன் விஷத்தை கலந்து அருந்தியுள்ளார். இதில், மயங்கி நிலையில் கீழே விழுந்து கிடந்தாராம். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இடையிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து மனைவி சத்தியபாமா விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜமணிகண்டன் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.