2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே பைக்கில் கருந்திரி கட்டுக்களை கடத்தியவர் கைது

விருதுநகர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை  கன்னிசேரி-மத்தியசேனை சாலையில் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கடத்திச் செல்லப்படுவதாக வச்சக்காரப்பட்டி

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:32 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கருந்திரி கட்டுக்களை கடத்தியவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை  கன்னிசேரி-மத்தியசேனை சாலையில் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கடத்திச் செல்லப்படுவதாக வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அதிகாலையில் காவல் சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இச்சாலையில் வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதிலிருந்த சாக்குப்பையில் 300-கருந்திரி கட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே அவரிடம் விசாரித்ததில் விருதுநகர் அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமாணிக்கத்தின் மகன் வேளாங்கண்ணி(32) என்கிற விவரம் தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக வேளாங்கண்ணி மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்ததோடு, வாகனத்துடன் வெள்ளைத்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.