தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கரூரில் சகோதரர்கள் தற்கொலை: கந்துவட்டிக்காரர் குண்டர் சட்டத்தில் கைது

கரூரில் கந்துவட்டிக்கொடுமையால் சகோதரர்கள் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதையடுத்து கந்துவட்டிக்காரர் குண்டர் சட்டத்தில்

Updated On :28 ஜனவரி 2015, 9:31 am

கரூரில் கந்துவட்டிக்கொடுமையால் சகோதரர்கள் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதையடுத்து கந்துவட்டிக்காரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர்கள் மனோகரன்,  அண்ணாதுரை. சகோதரர்களான இவர்கள் வீட்டு செலவுக்காக திருமாநிலையூரைச் சேர்ந்த குபேரன் என்பவரிடம் வடிக்கு பணம் வாங்கியுள்ளனர். இதனிடையே வாங்கிய பணத்திற்கு அதிக வட்டி போட்டு சகோதரர்களை மிரட்டியதுடன், அவர்கள் தங்கியிருந்த வீட்டையும் எழுதி வாங்கிக்கொண்டதால் விரக்தியில் கடந்த மாதம் 17-ம்தேதி சகோதரர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.  இந்த வழக்கு தொடர்பாக குபேரன் உள்ளிட்ட மூன்று பேர் மீது பசுபதிபாளையம் போலீஸôர் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

 இதையடுத்து கந்துவட்டிக்கொடுமையால் சகோதரர்கள் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரர் குபேரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷிநிர்மல்குமாரின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி குபேரை குண்டர்சட்டத்தில் அடைக்குமாறு கடந்த 25-ம்தேதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குபேரன் 26-ம்தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.